அப்துல் காதர்

Brokerage Free Team •October 2, 2024 | 1 min read • 6 views

இந்த அப்துல் காதரைப்பற்றி எழுதுவதில் ஒரு விசேஷ சிரமம் இருக்கிறது; நேரில் பழகித்தான் அறியவேண்டுமே தவிர, சொல்லக் கேட்டோ அல்லது புஸ்தகத்தில் படித்தோ அறிய முடியாது. வர்ணனையிலிருந்து மட்டுமே ரோஜாவின் அழகையும் வாசனையையும் நாம் அறிய முடியுமோ? பால் என்னும் பொருள் கொக்கைப்போல நீண்டு கோணலானது என்று பிறவிக்குருடனான கிழவன் அனுமானித்தது போலாகும்.

 

அப்துல் காதர் வெகுநாளாக இவ்வூரில் தபால்காரனாக இருந்துவருகிறான். அவனை எத்தனையோ அதிகாரிகள் இடம் மாற்ற முயன்றும் முடியவில்லை. அவன் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் அனேகருக்குத் தபால்பைதான் கண்முன் வரும். தபால்காரன் என்றால் அப்துல் காதரின் நீண்ட மாம்பிஞ்சுகள் போன்ற மீசையும், படிப்படியான நீர்வீழ்ச்சி போன்ற தாடியும், சிரித்த பற்களும், அன்பு ததும்பும் கண்களும், நீல நிறச் சட்டையும், காக்கி தலைப்பாகையும் மனத்தின் முன் நிற்கும். மற்ற தபால்காரர்களெல்லாம் 'பொய்க்கு தபால்காரர்' போலத் தோன்றுவார்கள். சொல்லப்போனால், தபால்காரன் என்பதைத்தவிர வேறு ஹோதாவிலோ அல்லது 'பூர்வாச்ரம' நிலைகளிலோ அவனைக் கற்பனை செய்து பார்ப்பதுகூடக் கஷ்டமாக இருக்கிறது. அவன் தபால்கார அப்துல் காதராகவே பிறந்து, எப்போது

 

Discussion